நோயுற்ற மற்றும் சினையான கால்நடைகளை பராமரித்தல்
-
மந்தமான இளைத்த கால்நடைகளை மந்தையிலிருந்து பிரித்து தனியாக கொட்டகையில் வைத்து அதிக கவனத்திற்கு
உட்படுத்த வேண்டும். -
உரிய சிகிச்சையும், மருந்தும், உணவும், நீரும் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
-
நேரடி கண்காணிப்பிலோ அல்லது அடிக்கடி நேரிடையாக சென்று கவனித்து வர வேண்டும்.
-
தூய்மையான இடம், நீர், உணவு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
-
ஆகாரம் உண்ணா நிலையிலிருந்தால், குழல் மூலம் புகட்ட வேண்டும்.
-
கொட்டகை உரிய சீதோசன நிலைப்படி, காற்றோட்டத்துடன், தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
-
கொட்டகையில் போதுமான அளவு இடவசதியை அளித்து, படுக்கையும் (உலர்ந்த வைக்கோல்) அளிக்க வேண்டும்.
-
தனித்தனி, தீவன மற்றும் தண்ணீர் தொட்டியும், உபகரணமும் பயன்படுத்த வேண்டும்.
-
நோயுற்ற கால்நடைகள் குறைந்தளவே தீவனம் உட்கொள்ளும் ஆகவே சத்து மிக்க தீவனத்தை அளிக்க வேண்டும்.
-
எளிதில் செரிக்கக் கூடிய உணவாக இருக்க வேண்டும்.
-
நாளொன்றிற்கு தேவைப்படும் உணவை 4ம் உணவை 4_6 தடவைகள் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து கொடுக்க
வேண்டும். -
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்களாக இருப்பின் புரதச்சத்து மற்றும் உப்புச் சத்து குறைந்நத உணவாக இருக்க வேண்டும்.
-
கல்லீரல் சம்மந்தமான நோய்களுக்கு எளிதில் ஜீரணமாகும் எரிசத்து மிக்க தீவனங்கள் அல்லது குளுக்கோஸ் எரிசத்தை
வாய்/இரத்தக் குழாய் மூலம் அளிக்க வேண்டும். -
நச்சுத் தன்மை உடைய தீவனம் உண்டதால் ஏற்பட்ட வியாதியாக இருந்தால் உடனடியாக அத்தீவனத்தைத் தவிர்த்து நச்சு
முறிவு ஏற்படுத்தும் வழி முறைகளைக் பின்பற்ற வேண்டும். -
இளம் கால்நடைகளுக்கு ஜீரண நொதிகளையும், உயிர் சத்து (வைட்டமின்) கொண்ட பொருட்களையும் அளிக்க வேண்டும்.
சினை கால்நடைகளை பராமரித்தல்
-
சினையுற்ற கால்நடைகளை மற்றவைகளிடமிருந்து பிரித்து தனியாக பராமரிக்க வேண்டும்.
-
உடல் எடைக்கு ஏற்பவும், சினை காலத்திற்கு ஏற்பவும் அடர் தீவனத்தை அதிகப்படுத்தி வளரும் கருவிற்கு தேவையான
ஊட்டமும், எதிர்கால கறவைக்கும் ஏற்றபடி அளிக்க வேண்டும். -
கடைநிலை சினை தருணத்தில் ஈனும் கொட்டகையில் உரிய இடவசதியுடன், காற்றோட்டத்துடன் பராமரிக்க வேண்டும்.
-
தரை வழுக்காதவாறும், கரடு முரடு அற்றவையாகவும் இருக்க வேண்டும்.
-
தூய குடிநீரும், தீவனமும் நன்கு கிடைக்குபடி செய்ய வேண்டும்.
-
கடைநிலையில் உள்ள சினைதருணத்தில், மலச்சிக்கல் வராதவாறு குடிநீரும், அடர் தீவனமும் அளிக்க வேண்டும்.
TO FOLLOW