தூய்மையான பாலை உற்பத்தி செய்யும் வழிகள்
1. பாலின் தூய்மையும் தரத்தையும் அறிதல்
- பாலில் எந்த வித நிறக் கலப்பும் இருக்கக் கூடாது. சிவப்பு அல்லது மஞ்சள் கலந்திருப்பின் அது நோய்வாய்ப்பட்ட பாலாகும்.
- பால் தயிர் போல கெட்டியாக இல்லாமல் சீரான தன்மையுடையதாக இருக்க வேண்டும்.
- பாலில் எந்த வித துர்நாற்றமும் இருக்க கூடாது.
- பால் திரிந்து போதல் கூடாது.
- பாலில் எந்த வித அயல் பொருள்கள் (குப்பை மற்றும் துகள்கள்) இருக்க கூடாது.
- பால் பாத்திரம் மிகுந்த தூய்மையாக இருக்க வேண்டும்.
2. சுகாதார முறைகள்
- தூய்மையாக கறவை மாடுகள்/எருமை மாடுகள்
- தூய்மையான சுற்றுப்புறம்.
- கறவை மாடுகளையும், உற்பத்தி செய்யப்பட்ட பாலை கையாளும் சுகாதார முறைகள்.
3. மாட்டுத் தொழுவதும் அதன் சுகாதாரமும்
- மாட்டுத் தொழுவமானது சற்று உயரமான இடத்தில் நல்ல சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க அமைத்தல் வேண்டும்.
- மாட்டுத் தொழுவத்தின் தரையானது செங்கல் மற்றும் பாறைகளின் மேற்பகுதியை சொரசொரப்பாக்கிய பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். தீவனப்பாதை, தண்ணீர்த்தொட்டி, மாடு நிற்குமிடம், வடிகால் மற்றும் பால் கறவை பாதை ஆகியவை அமைத்திடவேண்டும்.
- இரட்டை வரிசை தொழுவத்தில் மாடுகளின் தலை உள்பக்கம் நோக்கி இருக்குமாறு அமைப்பதை விட கட்டிடத்தில் வெளிப்பக்கம் நோக்கி இருக்குமாறு அமைத்தலே நல்லது.
4. கறவை மாடுகளின் சுகாதாரமும், தூய்மையான பாலும் - சில வழிமுறைகள்:
- பால் கறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொழுவத்தை கழுவி விட வேண்டும்.
- கறவை மாடுகளை சுத்தம் செய்த பின்னர் தகுந்த கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தூய்மையான துணி கொண்டு மடிகளையும், காம்புகளையும் துடைத்து விட வேண்டும்
- பால் கறக்கும் பாத்திரங்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி பின்னர் 200 மிலி கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் கொண்டு தயாரிக்கப்பட்ட திரவத்தால் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி பின்பு பால் கறக்க பயன்படுத்துதல் மிகவும் அவசியம்.
- பால் கறப்பவர்கள் எந்தவித நோயின் அறிகுறிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பால் கறக்கும் முன் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்
- பால் கறக்கும்போது எல்லா காம்புகளிலும் உள்ள முதல் பாலை தரையில் பீய்ச்சி விட்டு பின்னர் பால் கறக்கும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பால் கறந்தவுடன் உடனடியாக சுத்தமான, மெல்லிய, உலர்ந்த துணி கொண்டு வடிகட்ட வேண்டும்.
- கறந்த பாலை உடனடியாக 10சி அளவில் அல்லது அதற்குக் குறைந்த வெப்பநிலைக்கும் குளிர வைக்க வேண்டும்.
TO FOLLOW