கால்நடைகளுக்கு மர இலைகளை தீவனமாக அளித்தல்
மேய்ச்சலை மையமாக வைத்து வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் புரதம் அல்லது எரிச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும் வறட்சி மற்றும்
கோடைக்காலங்களிலும் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு அவை உடல் எடையை இழந்து உற்பத்தியையும் குறைக்கின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் கோடையிலும் பசுமை செழித்து இருக்கும் மரங்களின் இலைகளைத் தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
கல்யாண முருங்கை
கிளரிசிடியா
அகத்தி
உசில மரம்
மாடுகளுக்கு அவை உண்ணும் தழைத் தீவனத்தில் 30% மர இலைகளை அளிக்கவேண்டும். அதாவது நானொன்றுக்கு 12-15 கிலோ பசும் இலைகள் தேவைப்படும்.
தீவன மரங்கள்:
| 1. கருவேல் | 9. ஆலமரம் | 17. எலத்தை மரம் |
| 2. வெல்வேல் | 10.அரச மரம் | 18.கொடுக்காபுளி |
| 3. வாகை | 11.ஆயா மரம் | 19.கல்யாண முருங்கை |
| 4. பில்லவாதை | 12.உத்தி மரம் | 20.அகத்தி |
| 5. பலா மரம் | 13. சவுண்டல் | 21.உசில மரம் |
| 6. பீநாரி மரம் | 14. முருங்கை மரம் | 22.சீமைச் கருவேல் |
| 7. வேப்ப மரம் | 15. கிளரிசிடியா | |
| 8. பூவரச மரம் | 16.புளிய மரம் |
- மர இலைகளை பிற புற்களுடன் சிறிது சிறிதாக சேர்த்து அளித்து கால்நடைகளுக்கு பழக்கபடுத்த வேண்டும்.
- காலையில் வெட்டிய இலைகளை மாலையிலும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்த நாள் காலை வரையிலும் வாடவைத்து பிறகு தீவனமாக அளிக்க வேண்டும்.
- மர இலைகளை நிழலில் காயவைத்து அவற்றின் ஈரபதத்தை சுமார் 15 % க்கும் கீழே குறைத்து பின்பு தீவனமாக அளிக்க வேண்டும்.
- மர இலைகள் மேல் சுமார் 2% சமையல் உப்புக்கரைசலை தெளித்து பின்பு தீவனமாக அளிக்கலாம்.
- மர இலைகளின் மீது வெல்லம் கலந்த நீரை தெளித்து பின்பு தீவனமாக அளிக்கலாம்.
- மர இலைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளையும் விரும்பாத கால்நடைகளையும் அருகருகே கட்டிவைத்து தீவனம் அளிக்கலாம்.
TO FOLLOW