LATEST
CLICK HERE
TO FOLLOW

Fibrous Feeds

பல்வேறு வகையான தீவனப்பயிர்கள் உற்பத்தி மற்றும் மேலாண்மை

நார் தீவனங்கள்

நார்ச்சத்து மிக்கப் பொருள்களான தீவனப்பயிர்கள் மற்றும் வேளாண் கழிவுப் பொருள் நார் தீவனங்கள் ஆகும். இவற்றிலுள்ள ஊட்டச்த்துக்கள், ஈரப்பதம் மற்றும் பதப்படுத்தும் முறையைப் பொறுத்து பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.

பசுந்தீவனம்

பசுந்தீவனம் அதிக சுவைத் தன்மை கொண்டதாகவும், கால்நடைகளுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் இருப்பதோடு, அதிக ஊட்டச்சத்துக்கள் மிக்கதாக உள்ளது.

i. ஓராண்டு வகை தானியப் பயிர்கள்: 

பொதுவாக இப்பயிர்களில் புரதச்சத்து, இப்பயிர்களில் புரதச்சத்து, 7_10 சதவிகிதம் இருக்கும். தீவனத்திற்காக மட்டும் பயிரிடும் சமயத்தில் இவற்றை அதன் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து சத்துமிக்க தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம். எ.கா தீவன மக்காச்சோளம், தீவன சோளம், தீவனக்கம்பு.

ii. புல்வகை பல்லாண்டு தீவனப்பயிர்கள் : 

பொதுவாக புல்வகை தீவனப் பயிர்களில் 6_10 சதவிகிதம் புரதச்சத்து இருக்கும், எ.கா நேப்பியர் – கம்பு ஒட்டுப்புல் (கோ_1, கோ_3, கோ_4) , கினியா புல், கொழுக்கட்டைப்புல், பாராபுல்.

iii. பயிர்வகை தீவன பயிர்கள் :

இவ்வகைப் பயிர்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை தனது வேர் முடிச்சுகள் மூலம் மண்ணில் நிலை நிறுத்தி அதன் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்துவதுடன் மண்ணின் வளத்தையும் மேம்படுத்தும். இவற்றில் 8_15 சதவிகிதம் செரிமானப் புரதம் இருக்கும். எ.கா குதிலை மசால் (லூசர்ன்), வேலி மசால்(டெஸ்மான்தஸ்), காராமணி, சணப்பை, முயல் மசால் (ஸ்டைலோ).

iv. மர இலைகள் :

புரதச்சத்து மிக்க மர இலைகளை தீவனத்திற்கு ஒரு பகுதியாக உபயோகப்படுத்துவதன் மூலம் தீவனச் செலவு குறைகிறது. மரங்களைத் தனித்தோ அல்லது பிற தீவனப் பயிர்களுடன் இணைத்தோ வளர்க்கலாம். மர இலைகளில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருக்கும். எ.கா சுபாபுல், கிளிரிசிடியா, வாகை, வேம்பு, அகத்தி, கல்யாண முருங்கை, கொடுக்காப்புளி.

2. உலர்த் தீவனங்கள்

நார்ச்சத்து மிக்க உலர்த் தீவனங்கள் கால்நடைகளின் உலர் பொருள் சத்துத் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுகின்றன. இவற்றில் ஈரப்பதம் 10_15 சதவிகிதம் இருக்கும்.

i. காய்ந்த தீவன பயிர்கள் :

இவ்வகை தீவனப் பயிர்களை அதன் பூ பூக்கும் தருணத்தில் அறுவடைச் செய்து சூரிய ஒளியில் உலர்த்தி அதன் ஈரப்பதத்தை 15 சதவீகிதத்திற்கும் குறைவாகச் செய்து பூஞ்டச வளராத வகையில் சேமிப்பதால் ஊட்டச்சத்து மிக்க தீவனமாக இருக்கும்.

ii. வைக்கோல், தட்டு வகை தீவனங்கள் :

இவ்வகை வேளாண் உபபொருள்களாக கிடைக்கின்றன. தானியம் மற்றும் பணப்பயிர்கள் ஆகியவற்றில் இருந்துகிடைக்கும் கழிவுப் பொருள்கள் சத்து குறைவானதாகவும், நார்ச் சத்து மிக்கதாகவும் இருப்பதால் அதிகளவு பால் தரும் கறவை மாடுகளுக்கு சிறிதளவுமட்டுமே அளிக்கப்பட வேண்டும். எ.கா வைக்கோல், சோளத்தட்டு, கடலைக்கொடி, கரும்பு சோகை.

 

 

Announcements
21st Livestock Census 2024-25
05 Apr 2026
Free Veterinary Health Camp - January 2025
31 Mar 2026
Animal Ambulance Service - Dial 1962
26 Mar 2026
Subsidy for Dairy Farmers - Application Open
21 Mar 2026
1962
Animal Ambulance
24/7 Emergency Services
1800 425 5880
Toll Free Helpline