பால் கறவை முறைகள் 
-
பால் பண்ணைகளில், பால் கறவை என்பது ஒரு முக்கியமான
செயலாகும். பால் சுரப்பிலிருந்த 5 முதல் 7 நிமிடங்களுக்குள்
பால் கறவையை முழுமையாக முடிக்க வேண்டும். -
பால் கறவைக்கு முன், அழுக்குகள் சுரண்டப்பட்டு, தரை
கழுவப்பட்டு, இடம் உலர்ந்த இருக்க வேண்டும். பசுக்களின்
பின் பக்கம், தொடைகள், பால் மடி முதலியன சாணம்
ஒட்டிக்கொண்டிருந்தால் பிரஷ் கொண்டு தேய்ந்து விட்டு,
சுத்தமான தண்ணீரில் கழுவப்பட வேண்டும். -
கறவைக்கு சற்றுமுன் கன்றுகள் பால் உறிஞ்சிய பின் பால்மடி, கிருமிநாசினியில் நனைத்த துண்டு கொண்டு
சுத்தமாக துடைக்கப்பட வேண்டும். பால் கறவையாளர் பால் கறக்கும் வாளிகள் முதலியன நன்கு சுத்தமாக
இருக்க வேண்டும். -
கறவையாளர் சுத்தமாக துணி அணிந்து கொண்டு, தலைமுடி கொட்டாமல் இருக்க, தலைக்கு தொப்பி வைத்துக்
கொள்வது நல்லது. நகங்கள் வெட்டப்பட்டு அவர்கள் கைகளும் கிருமி நாசினியில் கழுவப்பட்டிருக்க வேண்டும். -
பால் பாத்திரங்கள் ஒவ்வொரு கறவையின் பின் சுத்தமான நீரால் கழுவப்பட்டு தண்ணீரால் மீண்டும் சுத்தமாக்கி,
பரண்களில் தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்டிக்க வேண்டும். -
பால் கறவையாளர்கள் முறைப்படி மாற்றிக் கொண்டேயிருந்தால் நல்லது. இதனால் ஒரு பசு, ஒரு கறவையாளரிடம்
மட்டுமே பழக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. -
கறவைப் பசுக்கள் தினப்படி, ஒரே நேரத்தில் கறக்கப்படுவது நல்லது. அடிக்கடி கறவை நேரத்தை மாற்றிக்
கொண்டேயிருக்கக் கூடாது.
சிறந்த பால் கறவை முறைகள்
TO FOLLOW