பல்வேறு வகையான தீவனப்பயிர்கள் உற்பத்தி மற்றும் மேலாண்மை
அடர்தீவனம்
ஊட்டச்சத்துகள் மிகுந்த, 18 சதவீதத்திற்கும் குறைவான நார்ச்சத்து கொண்ட தீவனப் பொருட்களை அடர்த்தீவனம் என்கிறோம்.
எரிசத்து மிக்கவை :
மக்காச்சோளம், அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, மரவள்ளிக்கிழங்கு மாவு, மொலாசஸ் (கரும்பாலைக் கழிவு).
புரதச்சத்து மிக்கவை :
புண்ணாக்கு வகைகள், மீன் மற்றும் இறைச்சித்தூள், நுண்ணுயிர் புரதங்கள், பருப்பு வகைகள்.
தாது உப்பு கலவை :
சுண்ணாம்புச்ச்த்து, மணிச்சத்து, மேக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பிற தாது உப்புக்கள் கொண்ட கலவை (மினரல் கலவை).
உயிர்சத்து மூலப்பொருட்கள் :
வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கலவை.
கலப்புத் தீவனம் :
மேற்கண்ட மூலப் பொருள்களையும், பிற தீவனப் பொருள்களான தவிடு, பொட்டு ஆகியவற்றையும், ஒரு குறிப்பிட்ட அளவுகளில் கலந்து தயாரிக்கப்படுவதாகும்.
i. அடர்தீவனம் தயாரிக்கும் முறை
அந்தந்தப் பருவ காலங்களில் கிடைக்கும் மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் விலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்கண்டவாறு குறைந்த விலையில் அடர்தீவனம் தயார் செய்யலாம்.
| மக்காச்சோளம் / சோளம் / கம்பு / ராகி (உடைத்தது) | 30 கிலோ |
| பருத்திக்கொட்டை/கடலை/எள்/சூரியகாந்தி புண்ணாக்கு | 20 கிலோ |
| சூரியகாந்தி புண்ணாக்கு / அரிசி / கோதுமை தவிடு | 35 கிலோ |
| பயறு வகைகள் (கொள்ளு, பாசிப்பயறு) | 12 கிலோ |
| தாது உப்பு கலவை | 2 கிலோ |
| வைட்டமின் கலவை (A, D 3 ) | 10 கிலோ |
| சாதாரண உப்பு | 1 கிலோ |
ii. அடர்தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- அடர்தீவனம் அளிப்பதன் மூலம் மாடுகளுக்கு சரிவிகித உணவு கிடைக்கிறது. தேவையான அளவு எரிசக்தி, புரதம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கிறது.
- உப்பு சேர்க்கப்படுவதால் அதிக பால் கொடுக்கும் மாடுகளின் உப்பு தேவையை
பூர்த்தி செய்ய முடிகிறது. - அடர்தீவனம் அளிப்பதன் மூலம் தீவனத்தில் உள்ள நார்ச்சத்துப் பொருள்களின்
செரிமான தன்மையை ஓரளவு அதிகரிக்க முடியும்.
TO FOLLOW