LATEST
CLICK HERE
TO FOLLOW

Silage Making

சைலேஜ் தயாரிப்பு

பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல், மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ எனப்படும் காற்றுப் புகா குழியில் பதப்படுத்தி சேமிக்கும் முறைக்கு சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை என்று பெயர். 

சைலேஜ் தயாரிக்கும் முறை

  • பசுந்தீவனத்தை சுமார் 2 முதல் 3 மணி நேரம் சூரிய ஒளியில் உலர்த்தி ஈரப்பத அளவை 75 முதல் 80 சதவீதத்திலிருந்து 60 முதல் 65 சதவீதம் குறைத்து அவற்றை 2-3 அங்குலம் கொண்ட சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் இட்டு அடுக்கடுக்காக அடுக்கி வரவேண்டும்.
  • சுமார்20 முதல் 30 செ.மீ அடுக்கிய தீவனத்தை நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்றி பிறகு அதன் மீது 2 சதவீதம் சர்க்கரை பாகு கரைசலையும், 1 சதவீதம் சாதாரண உப்புக் கரைசலையும் தெளிக்க வேண்டும்.
  • பிறகு மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்க வேண்டும்.
  • இவ்வாறு தொடர்ந்து அடுக்கி சைலோவின் மேல் மட்டத்தை விட 1 முதல் 1.5 மீ உயரம் வரை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியில் வைக்கோல் அல்லது
    உபரியாகக் கிடைக்கக் கூடிய புல் போன்றவற்றைக் கொண்டு மூடி அதன் மேல் ஈர மண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் செய்ய வேண்டும். பாலிதீன் தாள்களையும் பயன்படுத்தலாம்.
  • இதன் பிறக 30-45 நாள்களில் தரம் மிக்க சைலேஜ் உருவாகி விடும். சைலோவைத் திறக்கும் முன்பாக மேற்பகுதியில் உள்ள பயன்படாத பதம் குறைந்த தீவனத்தை அகற்றி விட வேண்டும். தரமான சைலேஜ் பழ வாசனையுடன் கூடிய நறுமணம் உடையதாகவும், பசுமை நிறத்துடனும் சாறு கலந்தும் இருக்கும்.
  • பூஞ்சை பாதித்த சைலேஜை கால்நடைகளுக்கு அளிக்கக் கூடாது.
  • அதிக புளிப்புச் சுவையுடனுள்ள சைலேஜை கொடுக்கக் கூடாது.
    நாளொன்றிற்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் சைலேஜின் அளவு
    கறவை மாடு – 15-20 கிலோ
    கிடேரி - 5-8 கிலோ
    பசுந்தீவனம் பற்றாக்குறை இருக்கும் கோடை காலத்தில் இவ்வாறு பதப்படுத்திய
    புல்லை அளிக்கலாம்.

Announcements
21st Livestock Census 2024-25
05 Apr 2026
Free Veterinary Health Camp - January 2025
31 Mar 2026
Animal Ambulance Service - Dial 1962
26 Mar 2026
Subsidy for Dairy Farmers - Application Open
21 Mar 2026
1962
Animal Ambulance
24/7 Emergency Services
1800 425 5880
Toll Free Helpline