LATEST
CLICK HERE
TO FOLLOW

Soilless Green Fodder Cultivation

மண் இல்லாத பசுந்தீவன வளர்ப்பு

மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளை இந்த மண் இல்லாத தீவன முறையில் வளர்க்கலாம். இதில் ஆண்டு முழுவதும் கிடைப்பது மக்காச்சோளம் மட்டுமே. விவசாயிகள் புதிய நன்கு காய்ந்த பூசனம் பிடிக்காத, நன்கு விளைந்த முனை உடையாத மக்காச்சோளத்தை தேர்வு செய்ய வேண்டும். இதனால் மக்காச்சோளம் நன்கு முளைத்து அதிகபட்ச பசுந்தீவனத்தைக் கொடுக்கும். மண் இல்லாத தீவனப் பயிரின் இலை, வேர், விதைப்பகுதி என மூன்றையும் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.

மண் இல்லாத பசுந்தீவனம் நன்மைகள்

  •        குறைந்த இடம்
  •        குறைந்த தண்ணீர்
  •        பூச்சுக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரம் எதுவும் தேவையில்லை

பயிர் வளர்ப்பு முறை

  •        ஒன்றரை சதுர அடிப்பரப்பளவுள்ள தட்டு ஒன்றுக்கு 300 கிராம் அளவுக்கு மக்காச்சோள விரை போதுமானது.
  •        நாள் ஒன்றுக்கு எத்தனை தட்டுகள் தீவனம் தேவையோ அதைப்போல் எட்டு மடங்கு வாங்க வேண்டும். உதாரணமாக ஒரு நாளைய தேவை பத்துத் தட்டுகள் தீவனம் என்றால், 80 தட்டுக்கள் வாங்க வேண்டும்.
  •        பத்துத் தட்டுகளுக்குத் தேவையான மூன்று கிலோ மக்காச் சோளத்தை நன்கு நீரில் மூழ்கும்படி ஒரு பிளாஸ்டிக் வாளியில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  •        இந்த ஊறிய விதையைச் சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்திற்கு இருட்டில் வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து பார்த்தால், விதைகள் சிறு முறை விட்டிருக்கும்.
  •        முளைவிட்ட விதைகளைப் பிளாஸ்டிக் தட்டுகளில், தட்டு ஒன்றுக்குச் சுமார் 300 கிராம் வீதம். இடைவெளியின்றி, ஆனால் ஒரு விதை மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி, சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
  •        பிறகு, தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று ஸ்டாண்டில் அடுக்கி வைத்து நீர்த்தெளிப்பான் மூலம் தண்ணீரை புகைப் போல் தெளிக்க வேண்டும். தண்ணீரை ஊற்றிவிடக் கூடாது.
  •        விதைகளில் எப்போதும் ஈரப்பதம் மாறாமல் வைத்திருக்க வேண்டும் மண் இல்லாத தீவனப் பயிருக்கு தண்ணீரின் தேவை மிகக் குறைவுதான். ஆனால் அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிக அவசியம்.
  •        அறையின் வெப்பநிலை 24-25 டிகிரி வரையிலும், காற்றின் ஈரப்பதம் 80-85 விழுக்காடாகவும் பராமரித்தால், விளைச்சல் பிரமாதமாக இருக்கும்.
Announcements
21st Livestock Census 2024-25
05 Apr 2026
Free Veterinary Health Camp - January 2025
31 Mar 2026
Animal Ambulance Service - Dial 1962
26 Mar 2026
Subsidy for Dairy Farmers - Application Open
21 Mar 2026
1962
Animal Ambulance
24/7 Emergency Services
1800 425 5880
Toll Free Helpline